×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் புதினா - கொத்தமல்லி பிரியாணி..!! வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் புதினா - கொத்தமல்லி பிரியாணி..!! வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

Advertisement

புதினா மற்றும் கொத்தமல்லியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நமது குழந்தைகளுக்கு இதை வைத்து சுவையான கிரீன் பிரியாணி செய்வது பற்றி இன்று காணலாம்.

தேவையான பொருட்கள் : 

பாஸ்மதி அரிசி - இரண்டு கப் 

புதினா, கொத்தமல்லி - ஒரு கப்

வெங்காயம் - இரண்டு 

தக்காளி - இரண்டு 

பட்டை - சிறிதளவு 

பச்சை மிளகாய் - ஐந்து 

ஏலக்காய் - ஒன்று 

கிராம்பு - நான்கு

உருளைக்கிழங்கு - ஒன்று 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கை தோள்கள் நீக்கி சதுரவடிவில் வெட்டிகொள்ள வேண்டும். 

★வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாயை பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

★கொத்தமல்லி, புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நன்கு கழுவி அதனை பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

★வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடான பின்னர் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கி பின் ஆறவைக்க வேண்டும். 

★இவை ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் நெய்விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

★பின்னர் இஞ்சி, பூண்டுவிழுது சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கு, மசாலா, உப்பு போன்றவற்றை சேர்த்து கிளறவேண்டும். 

★பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு நீரூற்றி மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வைத்து எடுத்தால் சுவையான பிரியாணி ரெடி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lifestyle #Mint coriander biryani #புதினா கொத்தமல்லி பிரியாணி #சமையல் குறிப்பு #Latest news #Ladies Corner #Kitchen Corner
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story