ரத்தத்தை சுத்திகரிக்கவும், ஆண்மை அதிகரிக்கவும் புதினா கொத்தமல்லி தோசை.. 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!
ரத்தத்தை சுத்திகரிக்கவும், ஆண்மை அதிகரிக்கவும் புதினா கொத்தமல்லி தோசை.. 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!
ரத்தத்தை சுத்தம் செய்யவும், ஆண்மை அதிகரிக்கவும் புதினா கொத்தமல்லி தோசை எப்படி செய்வது என்று தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி - 3/4 கப்
புதினா - 1 கைப்பிடி
கருவேப்பிலை - 1கொத்து
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
தோசை மாவு - 2 கப்
புளி - சிறிதளவு
பூண்டு - 5
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
★பின் இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
★ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் புளி, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
★வதங்கிய பின் ஆற வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.
★அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
★அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான புதினா கொத்தமல்லி தோசை தயாராகிவிடும்.