நாயின் முதுகில் ஏறி ஜாலியாக சுற்றிவரும் குட்டி குரங்கு..! தாய் போல் ஆதரிக்கும் பெண் நாய்.! வைரல் வீடியோ.
Monkey ride with dog video goes viral
சமூக வலைத்தளங்களின் அதீத வளர்ச்சிக்கு பிறகு உலகில் எந்த இடத்தில் வித்தியாசமான காட்சி நடைபெற்றாலும் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், குரங்கு குட்டி ஒன்றை நாய் தனது முதுகில் சுமந்து செல்லும் காட்சி வைரலாகிவருகிறது.
குட்டி குரங்கு ஓன்று தனது கையில் உணவு பொருளை வைத்துக்கொண்டு, அதை தின்றபடியே நாய் மீது ஏறி சவாரி செய்கிறது. குரங்கு தன் மீது ஏறுவதை சற்றும் பொருட்படுத்தாத அந்த நாய் குட்டி குரங்கை தனது மீது ஏற்றிக்கொண்டு அந்த பகுதியை உலா வருகிறது.
இருவரும் நீண்ட வருடம் பழகிய நண்பர்கள் போல் நடந்துகொள்ளும் அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.