ஏன் காலையில் எழ வேண்டும் தெரியுமா?.. இதையெல்லாம் செஞ்சா அடுத்த பில்கேட்ஸ் நீங்க தான்..! அசத்தலான டிப்ஸ்..!!
ஏன் காலையில் எழ வேண்டும் தெரியுமா?.. இதையெல்லாம் செஞ்சா அடுத்த பில்கேட்ஸ் நீங்க தான்..! அசத்தலான டிப்ஸ்..!!
அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் இது சமீபகாலமாகவே சவாலானதாகவே இருக்கிறது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. எலும்புகளை வலுவாக்கி, மனதை திடமாக்க உதவுகிறது. காலை எழுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தற்போது காணலாம்.
காலை எழுவதன் மூலம் மூளை இயக்கங்கள் சீராக செயல்பட்டு மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால் இன்றைய நாளுக்கான வேலைகளை திட்டமிட்டு முடிக்கலாம். உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதால் வளர்ச்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
காலையில் எழுந்து மூச்சுபயிற்சி செய்வது நுரையீரலுக்கு மிகவும் நல்லது. காலைநேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்த பின்பும், நிறைய நேரம் இருப்பதால் அந்த நாளின் மற்ற வேலைகளை முடிப்பதற்கு சரியான மனநிலை அமையும். இதனால் எந்த வித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக அன்றையநாளின் வேலையை திட்டமிட்டு முடிக்க இயலும்.