ரத்தசோகை வராமல் தடுக்க அருமையான ரெசிபி..புரதச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சூப் வீட்டிலேயே செய்வது எப்படி?..!
ரத்தசோகை வராமல் தடுக்க அருமையான ரெசிபி..புரதச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சூப் வீட்டிலேயே செய்வது எப்படி?..!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
முருங்கைக்கீரையில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளதால், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மேலும் முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட இரும்புசத்து 25 மடங்கு அதிகமாக உள்ளது. இதனை உண்பதன் மூலம் ரத்தசோகை வராமல் தடுக்க இயலும்.
தேவையான பொருட்கள் :
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 5 தேக்கரண்டி
முருங்கைக்கீரை - 1 கப்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
பூண்டு பல் - 4
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
தோல் சீவைய இஞ்சி - சிறிதளவு
செய்முறை :
★முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
★பின் முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
★அடுத்து குக்கரில் கீரை, பாசிப்பருப்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் மற்றும் பூண்டு சேர்த்து மூடி நான்கு விசில் விட்டு இறக்க வேண்டும்.
★விசில் வந்த பின் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்க வேண்டும்.
★பின் வானலில் நெய் விட்டு உருகியதும், முருங்கைக்கீரை சாறு மற்றும் பருப்பை ஊற்ற வேண்டும்.
★இறுதியாக ஒரு கப் தண்ணீர், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயாராகிவிடும்.