×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கறி சுவையையே மிஞ்சும் காளான் குருமா" எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.?

கறி சுவையே மிஞ்சும் காளான் குருமா எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.?

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் காளான் என்பது மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. காளான் சுவையில் கறியை போன்றே இருந்து வருவதால் வெஜ் பிரியர்கள் மட்டுமல்ல நான் வெஜ் பிரியர்களும் இதனை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

கறிசுவையையே மிஞ்சும் காளான் குருமாவை எப்படி செய்வதென்று பார்க்கலாமா ?

தேவையான பொருட்கள்

காளான், தக்காளி, வெங்காயம், பூண்டு, முந்திரி, ஏலக்காய், பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, மல்லிதழை, எண்ணெய், உப்பு, சீரகம், சோம்பு போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை
காளானை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு பின்பு மிக்ஸியில் தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், முந்திரி, பூண்டு போன்றவற்றை போட்டு நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது மற்றும் காளனை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்த பின்பு கொத்தமல்லி தலைகளை சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறலாம். கமகமக்கும் காளான் குருமா தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mushroom #Recipe #Viral #Lifestyle #Tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story