வணக்கமுங்கோ ஷீலாவை கைவிட்டு சென்றாரா நெல்லை சங்கர்?.. குடிக்கு அடிமையான மாமாவை தேடி ஏங்கிப்போன ஷீலா.. கண்ணீர் வீடியோ வைரல்.!
வணக்கமுங்கோ ஷீலாவை கைவிட்டு சென்றாரா நெல்லை சங்கர்?.. குடிக்கு அடிமையான மாமாவை தேடி ஏங்கிப்போன ஷீலா.. கண்ணீர் வீடியோ வைரல்.!
டிக் டாக்கில் சிறகடித்து பறந்து வந்த வணக்கமுங்கோ ஷீலா - நெல்லை சங்கர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து தனிக்குடித்தனம் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஷீலாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தொடர்ந்து பல மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சங்கர் மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்நிலையில், வணக்கமுங்கோ ஷீலாவின் புதிய வீடியோவில், "மாமா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாட்களில் இருந்து வீட்டில் ஒரே தகராறு. இதனால் நான் சரியாக சாப்பிடவில்லை. நேற்று மயங்கிவிட்டேன். பக்கத்து வீட்டு அக்கா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு எனக்கு குளுக்கோஸ் போட்டார்கள். மாமா இன்று வரை வீடுவந்து சேரவில்லை. என்னை அன்புடன் வைத்து தாங்கிய மாமா, என்னை விட்டு எங்கோ சென்றுவிட்டார். நீ வா மாமா. குடிப்பழக்கத்தை விட்டு திருந்தி வரவேண்டும்.
நான் தவறு செய்திருந்தாலும் சொல்லியிருக்கலாம் அல்லவா?. உன்னை தேடி வரவும், உன்னை நினைத்து அழவும் எனது உடலில் தெம்பில்லை. மாமா சீக்கிரம் வந்துவிடு. அனைவரும் அம்மா வீட்டுக்கு போய்விடு என்று கூறுகிறார்கள். நான் போகமாட்டேன். நீ வா மாமா" என்று கண்ணீர் மல்க பேசுகிறார்.
இதனால் காதலித்து கரம்பிடித்த ஷீலாவை சங்கர் மதுவுக்கு அடிமையாகி கைவிட்டு சென்றாரா? அல்லது குடியை மறந்து திருந்தி வர சென்றாரா? என்பது தெரியவில்லை. அவர் இல்லம் திரும்பினாலே அதற்கான பதில் கிடைக்கும். நெல்லை சங்கர் மேற்படி விடியோவை பார்த்து எங்கிருந்தாலும் வந்துவிடுமாறு ஷீலாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.