நீரிழிவை குணப்படுத்தி கொழுப்பை கரைக்கும் ஓட்ஸ் குழிப்பணியாரம்.. இன்றே செய்து அசத்துங்கள்..!!
நீரிழிவை குணப்படுத்தி கொழுப்பை கரைக்கும் ஓட்ஸ் குழிப்பணியாரம்.. இன்றே செய்து அசத்துங்கள்..!!
ஓட்ஸ் சாப்பிடுவது இரண்டாம் கட்ட நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவிசெய்கிறது. ஓட்ஸ் கெட்ட கொழுப்புகளை கரைக்கும். இன்று ஓட்ஸில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
அரிசி மாவு - ஒரு கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறிதளவு
கேரட் - ஒன்று
முட்டைக்கோஸ் - சிறிதளவு
சீரகம் - அரை கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு மற்றும் நெய் - தேவையான அளவு
செய்முறை:
★முதலில் எடுத்துக்கொண்ட கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
★வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் ஓட்ஸை 30 நிமிடம் வரை ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
★அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், முட்டைக்கோஸ், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
★இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடான பின்னர் மாவை அதில் இட்டு ஐந்து நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்.