பழைய சாதத்தை வைத்து சுவையான பக்கோடா செய்வது எப்படி.? அருமையான டிப்ஸ்!!
பழைய சாதத்தை வைத்து சுவையான பக்கோடா செய்வது எப்படி.? அருமையான டிப்ஸ்!!
மழை காலங்களில் மீதமான சாதத்தை வைத்து சுவையான பக்கோடா செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
கடலைமாவு - 1 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பழைய சாதத்தை சேர்த்து நன்கு மைத்து கொள்ளவும்.
பின்னர் மைத்த சாதத்துடன் கடலை மாவு, கார்ன்பிளவர் மாவு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை பக்கோடா போல் போட்டு நன்கு பொன்னிறமாக மாறியவுடன் மறு பக்கம் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான, சூடான பக்கோடா ரெடி.