சுவையான வெங்காய பொடி தோசை செய்வது எப்படி?.! 5 நிமிடத்தில் அசத்தலான ரெசிபி..!
சுவையான வெங்காய போடி தோசை செய்வது எப்படி?.! 5 நிமிடத்தில் அசத்தலான ரெசிபி..!
சுவையான வெங்காய பொடி தோசை எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
இட்லி பொடி - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
தோசை மாவு - 1 கப்
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
★பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி கலந்து வைத்த வெங்காய கலவையை அதன் மீது தூவி, இட்லி பொடி தூவி, எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
★இறுதியாக தோசையை திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறினால் சூப்பரான வெங்காய பொடி தோசை தயாராகிவிடும்.