யோசிக்காம கைய புடிச்சு மேல வாங்க..! அனைவரின் இதயத்தையும் வென்ற குரங்கு..! வைரல் புகைப்படம்.!
Orangutan Offers Helping Hand to Man Stuck in river
இன்றைய சூழலில் மனிதே சக மனிதனுக்கு உதவி செய்ய தயங்கும் சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெறுகிறது. அப்படி இருக்க, ஆறு ஒன்றில் நின்றுகொண்டிருந்த வன ஊழியர் ஒருவர் ஆபத்தில் இருப்பதாக நினைத்து அவருக்கு கை கொடுத்து மேலே தூக்கிவிட முயற்சித்துள்ளது குரங்கு ஓன்று.
தெற்காசியாவின் போர்னியோ காடுகளில் விஷ உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வன ஊழியர் ஒருவர் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமாக ஆற்றுக்குள் இறங்கி பாம்புகளைத் தேடிக் கொண்டிருந்தார் அந்த ஊழியர். அப்போது அங்கு வந்த ஒராங்குட்டன் வகை குரங்கு ஓன்று அந்த ஊழியரை நீண்ட நேரமாக கவனித்துளது.
இவர் ஆற்றுக்குள் சிக்கிக்கொண்டு மேலே வர முடியாமல் தவிக்கிறார் என்று நினைத்த குரங்கு, அவர் அருகில் வந்து தனது ஒரு கையை நீட்டி தனது கையை பிடித்து கரையேறி வருமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற அணில் பிரபாகர் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆனால், அந்த வன ஊழியர் அந்த குரங்கிற்கு கை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி கூறிய அந்த வன ஊழியர், அது ஒரு வனவிலங்கு, அதனால் ஆபத்து ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் தான் கை கொடுக்கவில்லை என அந்த ஊழியர் கூறியதாக தெரிகிறது. என்னதான் இருந்தாலும் மனிதர்களை மிஞ்சிய அந்த குரங்கின் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.