குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்தால்.. எதிர்காலமே பாழாகிடும்.. உஷார்.. பெற்றோர்களே.!
தயவுசெய்து குழந்தைகள் முன்னிலையில் இவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள்..! அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எச்சரிக்கை...!
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை :
பெற்றோர்கள் தயவுசெய்து குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடாதீர்கள். ஏனெனில், நீங்கள் தொடர்ந்து சண்டை போடுவது குழந்தைகளில் மன அமைதியைக் கெடுக்கும். மேலும், குழந்தைகள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை குறைந்து விடும்.
குழந்தைகள் முன் தீய வார்த்தைகளை பேசாமல் இருப்பது நல்லது, ஏனெனில் உங்களைப் பார்த்து தான் உங்கள் குழந்தைகளும் பேச தொடங்குவார்கள். இது, அவர்களின் ஒழுக்கத்தை பாதிக்கும். மேலும், குழந்தைகளிடம் 'உன் அம்மா இப்படி பட்டவர்' அல்லது 'உன் அப்பா இப்படி பட்டவர்' என உங்கள் சொந்த வெறுப்புகளைக் கூறாதீர்கள்
இதையும் படிங்க: முருங்கைக் கீரையுடன் முட்டை.. இப்படி பொரியல் செய்தால்.. எல்லோருக்கும் பிடிக்கும்.!
பணம் கொடுத்து குழந்தைகளுக்கு பழக்க வேண்டாம். ஏனென்றால், குழந்தைகள் வளர வளர எல்லாவற்றிற்கும் பணத்தை எதிர்பார்க்கும் ஆபாயம் ஏற்பட்டு விடும். இது அவர்கள் எதிர்காலத்திற்க்கு நல்லதல்ல.குழந்தைகள் முன் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை மறைமுகமாக வசைபாட வேண்டாம். இதனால் குழந்தைகள் அவர்கள் தீயவர்கள் என்று முடிவு செய்யும். அதோடு குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும்.
மற்ற குழந்தைகளை உயர்த்தி பேசிவிட்டு 'உனக்கு எதற்குமே துப்பில்லை' என்று பேச வேண்டாம். இவ்வாறு பேசுவது குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் :
குழந்தைகளிடம் நம்பிக்கை தரும் வகையில் பேசுங்கள். தேர்வில் தோற்று விட்டால், 'எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது'. நீ நிச்சயம் அடுத்த முறை வெற்றி பெறுவாய் என ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் எதிர்கால ஆசையை புரிந்து கொண்டு அதற்காக அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருங்கள்.
சேமிப்பு பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளிடம் தனிமையில் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். பொறுப்புள்ள பெற்றோர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்களை புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதும், தவறுகளை திருத்துவதும் ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாயக் கடமை ஆகும்.
இதையும் படிங்க: தூக்கமின்மையை சரி செய்ய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த 5 பழங்கள் போதும்.!?