கிரண் பேடியை கல்லூரிக்குள் சிறைவைத்த மாணவர்கள்; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!!
pondichery law college- kiran pedi
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆய்வுக்காக புதுவை சட்டக்கல்லூரிக்கு சென்றபோது தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மாணவர்கள் கிரண்பேடியை கல்லூரிக்குள் சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆளுநராக தற்சமயம் கிரண்பேடி பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இவருக்கும் பல முரண்பாடுகள் நிலவியதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது மாணவர்களும் அவருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என பல முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு முறையானது சிறப்பாக கையாளப்படுகிறதா என்று தற்சமயம் ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் புதுவை சட்டக்கல்லூரியில் இன்று ஆய்வை மேற்கொள்ள சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர், பேராசிரியர்களை சந்தித்து அங்கு மேற்கொண்டுள்ள மழைநீர் சேகரிப்பு முறையை கேட்டறிந்து ஆய்வு செய்தார். அந்த நேரத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி மற்றும் விடுதியில் அடிப்படை செய்திகள் வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. எனவே நீங்கள் தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஆளுநரோ நான் தற்போது மழைநீர் சேமிப்பு ஆய்வுக்காக வந்தேன் என்பது போல் அவர்களுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஆளுநரை வெளியே செல்லவிடாமல் கல்லூரி கேட் முன்பு தங்களது பைக்குகளை நிறுத்தினர். சில மாணவர்கள் மெயின்கேட்டை இழுத்து முடியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து முதல்வரை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக அந்த காவல்துறையினர் மாணவர்களை சமரசப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் மாணவர்கள் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ஒருவழியாக மெயின்கேட்டை திறந்து ஆளுநர் கிரண் பேடி அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.