மண்பானையில் தண்ணீர் குடிக்கிறீர்களா.?! இதை முதலில் செய்யுங்கள்.!
மண்பானையில் தண்ணீர் குடிக்கிறீர்களா.?! இதை முதலில் செய்யுங்கள்.!
சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களின் பயன்பாட்டில் மண் பாத்திரங்கள் உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.மண்பானையில் தண்ணீர் அருந்தி வந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான நன்மைகளை அள்ளித்தருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மக்களிடையே மண்பானைப் பற்றிய விழிப்புணர்வு நிலவி பயன்பாட்டில் இருப்பது ஆச்சரியம் தரக்கூடிய விசயமாக கருதப்படுகிறது.
கோடைக்காலத்தில் மண்பானை தண்ணீர் அருந்தி வருவது அதிகளவில் நன்மையை உண்டாக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.மண்பானை இயற்கையாகவே கெட்ட நீரை தூய்மையான நீராக மாற்றும் தன்மை உடையது. இதில் தண்ணீர் வைத்து குடிக்கும் போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர் போலவும், மினரல் வாட்டர் போலவும் இருக்கும்.
இது கோடைக்காலத்தில் ஏற்படும் தீராத தண்ணீர் தாகத்தையும் போக்குகிறது.மண்பானை வாங்கி முதன்முதலில் பயன்படுத்தும் போது ஒரு வாரத்துக்கு நீரை உற்றி அதை எடுத்துக் கொட்டிவிட்டு பிறகு நாம் குடிக்க வேண்டிய தண்ணீரை ஊற்றி வைத்துக் குடித்து வரலாம்.