×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரத்திற்கு இரண்டு முறை மது அருந்துபவர்களா நீங்கள்? அதனால் வரும் பிரச்சனைகள்!

Problems for drink alcoholic

Advertisement

தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைஞர்கள் சிறுவயதிலேயே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டு வருகின்றனர். 

 தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் நாம் ஒரு பீர் தானே சாப்பிடுகிறோம்,  அல்லது வாரத்திற்கு ஒருமுறை தானே மது அருந்துகிறோம் என இந்த பழக்கத்தை கற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த பழக்கம் நாளடைவில் அவர்களை மதுவிற்கு அடிமையாகி விடும். 

 மது அருந்துபவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது கணையம் மற்றும் கல்லீரல் ஆகும். இந்த மதுவின் வேலையே தன்னை ஒரு நாள் அருந்துபவர்களை வாழ்நாள் முழுவதும் தனக்கு அடிமையாக வேண்டும் என்பதே அதன் காரணியாக இருக்கின்றது. தயவுசெய்து ஒரு நாள் தான் அருந்துகிறோம், ஒரு வாரம் தான் அருந்துகிறோம் என எண்ணி இந்த பழக்கத்தில் விழுந்து விடாதீர்கள். 

 இந்த பழக்கத்தினால் பணம் அழிவது மட்டுமின்றி,  நமது அடுத்த தலைமுறையும் இல்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது அதிகம் உயிரிழப்பவர்களில் மது அருந்தியவர்கள் தான் அதிகம் இறக்கின்றனர். இந்த மதுப்பழக்கத்தினால் தமிழகத்தில் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளமாக உள்ளது. எனவே தயவு செய்து ஒரு பீர் தானே சாப்பிடுகிறோம், மாதத்துக்கு ஒருமுறை தானே சாப்பிடுகிறோம் என எண்ணி கூட, இந்த பழக்கத்தை கற்று கொண்டு மதுவுக்கு அடிமையாகி உங்களது அடுத்த தலைமுறையை இழக்காதீர்கள். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#alcohol #drinking alcohol
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story