குறைவாக தூங்கினாலும் ஆபத்து, அதிகம் தூங்கினாலும் ஆபத்து! உடனே படிங்க!
Problems of no sleep and high sleeping time
மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஓன்று தூக்கம். உணவு, நீர் இல்லாமல் கூட மனிதன் உயிர்வாழ்வதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தூக்கம் இல்லாமல் மட்டும் மனிதன் உட்பட எந்த உயிரினத்தாலும் உயிர் வாழ முடியாது. நமது முன்னோர்களை பொறுத்தவரை சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்தனர். இதனால் நீண்ட ஆயுள் வரை அவர்களால் வாழ முடிந்தது.
ஆனால், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்றிய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் செய்யும் தவறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக தூக்கம். தொலைபேசி என்ற ஒன்ற வந்த பிறகு தூக்கம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஒரு மனிதன் அன்றாடம் சராசரியாக 8 மணி நேரம் தூங்கவேண்டும் என்கிறது மருத்துவம்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதன் 6 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். அதுக்கு குறைவாக தூங்கினால் இதய நோய், பக்கவாதம் வர அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல 8 மணி நேரத்தை கடந்து அதிக நேரம் தூங்குபவர்களும் அதிகம் நோய் வர வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ட்டு முதல் ஒன்பது மணி வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒன்பது முதல் 10 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்குமாம்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மறவாதீர்கள்.