அந்த நேரத்தில் தூங்கினால், நிச்சயம் இந்த மாதிரி வியாதி வர வாய்ப்பு அதிகமாம்!
Problems of sleeping in afternoon more than 40 minutes
நம்மில் பலருக்கும் பொதுவாகா இருக்கும் பழக்கங்களில் ஓன்று மதிய நேரத்தில் தூங்குவது. நன்றாக சாப்பிட்டுவிட்டு சற்றும் உறங்கும் பழக்கம் நம்மில் அதிகப்படியான நபர்களுக்கு உண்டு. இது சரியா? வாங்க பாக்கலாம்.
பொதுவாக மதிய வேளையில் உறங்குவது தவறு இல்லை. ஆனால் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மதிய நேரத்தில் தூங்குவதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். உடலில் சற்று சோர்வு வரும்போது தூங்குவது தவறு இல்லை. இதனால் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும்.
ஆனால் அதுவே 40 நிமிடங்களை தாண்டும்போது சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சர்க்கரை வியாதியினால் நம் உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம்.
கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும் இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம் போன்றவற்றை பொறுத்து இது மாறுபடும்.
எனவே மதிய வேளையில் அதிகம் தூங்குவதை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்.