"தலை முடி உதிர்வுக்கு இதெல்லாம் தான் காரணம்!"
தலை முடி உதிர்வுக்கு இதெல்லாம் தான் காரணம்!
தற்போதுள்ள சூழ்நிலையில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தலை முடி உதிர்தல் தான். முடி வளர்ச்சியை வைத்தே ஒருவரது உடல் நலத்தை கணிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
தலை முடி உதிர்வுக்கு பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையே காரணம். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்பூ, கண்டிஷனர் பயன்படுத்துவது, அதிக சூடான வெந்நீரில் குளிப்பது, ப்ளீச் செய்வது தலைமுடி உதிர்வுக்கு காரணமாகும்.
தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இப்போது பரவி வருகிறது. ஆனால் ஒருவரின் முடியின் தன்மை மற்றும் தலையில் அரிப்பு, பொடுகுத் தொல்லை ஏற்பட்டால் தினமும் தலைக்கு குளிக்கலாம். தலைமுடி வறட்சியாக இருந்தால் தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரசாயன ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான சீயக்காய் கொண்டு தலைமுடியை நன்கு அலச வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும். மன அழுத்தம் கூட தலை முடி உதிர்வுக்கு காரணமாகும். எனவே எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.