இந்த காலத்து பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து பெற்றோர்கள் கெடுத்துவிட்டார்களா.?
இந்த காலத்து பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து பெற்றோர்கள் கெடுத்துவிட்டார்களா.?
அடியாது பிள்ளை படியாது என்று சொல்லி அந்த காலத்தில் ஆசிரியர்கள் அடித்து வெளுத்துவிடுவார்கள். இதை கேள்விப்பட்டால் பெற்றோரும் என்ன தவறு செய்தாய்? ஆசிரியர் உன்னை ஏன் அடித்தார் என்று கேட்டு, அவர்கள் பங்குக்கும் வெளுப்பார்கள்.
ஆனால் தற்போது ஆசிரியர்கள் திட்டினாலோ, கண்டித்தாலோ அதேபோல் பெற்றோர் திட்டினாலோ, கண்டித்தாலோ உடனே தற்கொலை செய்து கொள்வது, தற்கொலைக்கு முயல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தலைமுறையில், பிள்ளைகளுக்கு கேட்கும் முன் எல்லா வசதிகளையும் செய்துவைக்கின்றனர் 80 ஸ் இல் பிறந்த பெற்றோர்கள்.
அதற்க்கு காரணம் நாம் பார்க்காதவற்றை, அனுபவிக்காததை நம் பிள்ளை பார்க்கட்டும், அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் தான். ஆனால் இதுதான் பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைகிறது. கேட்காமலே கிடைக்கிறது. கேட்டால் உடனே கிடைக்கிறது என்கிற சூழலில், திடீரென ஏற்படும் ஏமாற்றங்களை தாங்கி கொள்ள முடியாமல் போகிறது. ஏமாற்றங்கள், வலிகள், கஷ்டங்கள் என தாங்கள் பட்ட கஷ்டங்களை உணர வைக்காமல் வளர்க்கப்படுவதால், சிறு பிரச்சனைக்கு கூட வாழ பிடிக்கவில்லை என்ற முடிவிற்கு சென்றுவிடுகின்றனர்.