தெரியுமா? உயிரை பறிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று எப்படி பரவுகிறது தெரியுமா?? மிகவும் கவனம் தேவை!!
கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராதநிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை எ
கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராதநிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை என்ற தொற்று மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், பீகார், கேரளா போன்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் கூட சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றினால் உயிரிழந்தார். விழுப்புரத்தில் மேலும் மூன்று பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று எப்படி ஏற்படுகிறது?
இந்த தொற்று ஒன்றும் மனித இனத்திற்கு புதிதல்ல. காலம் காலமாக நடந்துவரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவான போதும் கூட இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலத்தில் மீண்டும் இந்த தொற்று அதிகரித்துள்ளது.
மியுகோர்மைகோகிஸ் எனப்படும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது சாதாரணமாக சுற்றுசூழலில் காணப்படக்கூடிய ஒன்று. மனிதர்களின் சளி, காற்று, மண், தாவரங்கள், உணவு, அழுகிய பழங்களில் காணப்படும் பூஞ்சைகளில் இருந்து இந்த கருப்பு பூஞ்சை உருவாகிறது. இவை மனிதர்களை தாக்கும்போது அதன் தீவிரத்தன்மை குறைவுதான்.
ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீண்டகாலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களை இந்த கருப்பு பூஞ்சை அதிகமாக தாக்குகிறது.
குறிப்பாக முகம், மூளை, மூக்கு, கண்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த நோயானது சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்தால் கண் பார்வை இழப்பு, மரணம் ஆகியவற்றில் இருந்து குணப்படுத்த முடியும்.