சிவபெருமான் ஏன் கழுத்தில் பாம்பை அணிந்துள்ளார் தெரியுமா? யாரும் அறியாத ரகசியம்!
Reasons for why god shiva wearing snake on his neck
நாம் வழிபடும் ஒவ்வொரு கடவுளின் உருவமும் ஒரு தனித்துவத்தை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் சிவபெருமானின் உருவம் என்பது தனித்துவம் மற்றும் கம்பீரமானதாக இருக்கும். நெற்றியில் விபூதி அதற்க்கு மேலே ஒரு கண், கழுத்தில் பாம்பு மற்றும் ருத்ராச்ச மாலை என பார்க்கமே மெய் சிலிர்க்க வைக்கும்.
சிவபெருமானின் கம்பீரத்தை அதிகரிக்கும் ஒரு விஷயம் அவருடைய கழுத்தில் இருக்கும் பாம்பு. அவர் எதற்காக கழுத்தில் பாம்பை அணிந்துள்ளார் என்பதற்கு அநேக கதைகளும் காரணங்களும் இருக்கிறது. அவைகளில் ஒருசில காரணங்களை பற்றி விரிவாக காணலாம்.
பாம்பு அல்லது நாகங்கள் என்பது ஆரம்பம் முதலே இந்து மதத்தில் போற்றுதலுக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது. பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கை என்னவென்றால் சிவபெருமான் பாற்கடலை கடைந்த ஆலகால விஷத்தை குடித்ததில் இருந்ததுதான் பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொண்டை பகுதியில் நீலம் பாய்ந்த சிவேபெருமான் அந்த தருணத்திலிருந்து நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.
தனது கழுத்தில் இருக்கும் பாம்பு தன்னிடம் இருக்கும் ஈகோவை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை அடிக்கடி அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் இதனால் தான் சிவபெருமான் பாம்பை கழுத்தில் அணிந்துள்ளார்.
ஒரு சில குறிப்புகளில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடந்து முடிந்த பிறகு தான் பாம்பு சிவபெருமானின் கழுத்திற்கு வந்தது அதனால் பார்வதி தான் சிவபெருமானிற்கு பாம்பை பரிசாக வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சிவபெருமானிற்கு பசுபதிநாத் என்னும் பெயர் உள்ளது அதற்க்கு அர்த்தம் அணைத்து மனிதர்கள் மற்றும் விலங்குகளை கட்டுப்படுத்துபவர் என்று அர்த்தம். பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றால் பயம் அதனால் தான் பாம்பை சிவன் தனது கழுத்தில் அணிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.