அசைவ பிரியரா நீங்கள்.! கிரீன் சில்லி சிக்கனை இப்படி ஒரு முறை செய்து பாருங்க.!?
அசைவ பிரியரா நீங்கள்.! கிரீன் சில்லி சிக்கனை இப்படி ஒரு முறை செய்து பாருங்க.!?
அசைவ உணவு பிரியர்களுக்காக
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் அசைவ உணவு பிரியர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அசைவ உணவை பெரும்பாலும் காரமாகவே பலரும் சாப்பிட விரும்புவார்கள். குறிப்பாக பலருக்கும் சிக்கன் மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சமைக்காமல் இப்படி வித்தியாசமாக கிரீன் சில்லி சிக்கன் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
கிரீன்
சில்லி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: சாலையோரங்களில் வளரும் இந்த செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.!?
செய்முறை
முதலில் நன்றாக சிக்கனை சுத்தமாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு அரைத்து வைத்த மசாலா கலவையை போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் இதில் ஊற வைத்த சிக்கனை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக கிளறி விட்டு அதில் மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடியை போட்டு நன்றாக வேக விடவும். தண்ணீர் வற்றி வரும் போது அடுப்பை அனைத்து இறக்கினால் சுவையான கீரின் சில்லி சிக்கன் தயார்.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.! குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு உருளை கிழங்கு ஸ்நாக்ஸ்.!?