இளசுகளுக்கும் இப்போ மூட்டு வலி வருது! இயற்கையான மருத்துவம் என்னனு பார்க்கலாமா?!
பொடிசுகளுக்கு கூட இப்போ மூட்டு வலி வருது! இயற்கையான மருத்துவம் என்னனு பார்க்கலாமா?!
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தால் பலவித நோய்கள் சிறு வயதிலேயே வந்து விடுகிறது. இதில் முதன்மையாக இருப்பது மூட்டு வலி என்றே கூறலாம்.
முன்பெல்லாம் மூட்டு வலி என்றால் 50, 60 வயதிற்கு மேல் சகஜமாக இருந்தது. ஆனால் தற்போது பள்ளி படிக்கும் சிறுவர், சிறுமிகள் கூட மூட்டு வலி என்று புலம்புகிறார்கள். இதற்கு காரணம் சிலருக்கு உடல் பருமன் அதிகரிப்பு அல்லது சில கிருமிகளனாலும், சுரப்பிகள் ஒழுங்கற்ற செயல்பாட்டினாலும் ஏற்படும். மேலும் சிலருக்கு சீரற்ற மனநிலை நோய்த்தொற்று மற்றும் அடிபடுதல் போன்ற காரணங்களாகவும் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும்.
இந்த மூட்டு வலியை குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை இங்கு பார்க்கலாம்:-
- வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் சூடு செய்து வலி உள்ள இடத்தில் தடவி வரலாம்.
- தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு தேன் இரண்டையும் கலந்து வெதுவெதுப்பான நீரில் குடித்து வரலாம் இதன் மூலம் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும் இரண்டு பூண்டு பற்களுடன் வேக வைத்து தினமும் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.