செரிமானக்கோளாறை சரி செய்யும் மிளகு சீரக கஞ்சி... வீட்டிலேயே செய்வது எப்படி?..!
செரிமானக்கோளாறை சரி செய்யும் மிளகு சீரக கஞ்சி... வீட்டிலேயே செய்வது எப்படி?..!
செரிமானக்கோளாறு மற்றும் சளி, இருமல் பிரச்சனைகளை சரிசெய்யும் அரிசி மிளகு சீரக கஞ்சி எவ்வாறு சமைக்கலாம் என்று தற்போது காண்போம்.
மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டும் செரிமானக் கோளாறுகள் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்களும் இதனை உண்பதன் மூலமாக சரிசெய்ய இயலும்.
தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 25 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் புழுங்கல் அரிசியை ஒரு கடாயில் வறுத்து, மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக் கொள்ளவேண்டும்.
பின்★ ஒரு வாணலியில் வெந்தயம், பாசிப்பருப்பு ஆகியவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
★அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 2 கப் நீர் சேர்த்து, உப்பு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள் ஆகியவை போட்டு குக்கரில் வைத்து 5 விசில் வரை வேக விட வேண்டும்.
★இறுதியாக கடைந்த தயிரை கலந்து பரிமாறினால் உடலுக்கு நன்மையளிக்கும் அரிசி மிளகு சீரக கஞ்சி தயாராகிவிடும்.