சேமியாவை டிபனுக்கு தினமும் ஒரேமாதிரி செய்து சலித்துவிட்டதா?... இப்படி செய்து அசத்துங்கள் இல்லத்தரசிகளே.!
சேமியாவை டிபனுக்கு தினமும் ஒரேமாதிரி செய்து சலித்துவிட்டதா?... இப்படி செய்து அசந்துகள் இல்லத்தரசிகளே.!
எப்போதும் வீட்டில் ஒரேமாதிரியான சேமியாவை செய்து போர் அடித்துவிட்டதா?. வாருங்கள் இன்று வித்தியாசமான சேமியா புலாவ் எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
சேமியா - 2 கிண்ணம்,
தக்காளி - 3,
பச்சை மிளகாய் - 5,
கேரட் - 2,
பீன்ஸ் - 20,
பச்சை பட்டாணி - சிறிதளவு,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு,
தாளிக்க:
பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட சேமியாவை வானலியில் இட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பீன்ஸ், பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். தக்காளியை சிறிதாக நடுங்கி எண்ணெயில் இட்டு பேஸ்ட் போல பதத்தில் எடுக்க வேண்டும்.
இதன்பின் பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை சேர்ந்து தாளித்து வெங்காயம் மற்றும் பிற பொருட்களை சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்ந்து கிளறி 4 கப் தண்ணீரை சேர்க்க வேண்டும்.
தண்ணீர் சேர்த்து அது கொதிக்க தொடங்கியதும், சேமியாவை சேர்த்து உதிரியாக பதத்துடன் வேகவைத்து இறக்கி கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறினாள் சுவையான சேமியா புலாவ் தயார்.