தினமும் உணவில் மஞ்சள் அதிகமாக சேர்த்து கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா.?
தினமும் உணவில் மஞ்சள் அதிகமாக சேர்த்து கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா.?
மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மேலும் இது ஒரு கிருமி நாசினியாகும். எவ்வளவு நன்மைகள் மஞ்சள் கொண்டுள்ளதோ, அதே அளவு பக்க விளைவுகள் மஞ்சள் ஏற்படுத்துகிறது.
அதிகளவில் மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை பாதிக்கிறது. சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைத்து விடுகிறது.
மஞ்சள் அதிகம் எடுத்துக்கொள்வதால் ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு, அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதை ஒருநாளைக்கு 1000மில்லி கிராம் அளவுக்கு மேல் உட்கொண்டால் வாயுப்பிரச்சினை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும், பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை தொடர்ந்து 4 மாதங்கள் தினமும் 3.6கிராம் வரை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.