இரவு 10 மணி ஆகியும் உறங்கவில்லையா நீங்கள்.?! இதை படிங்க.!
இரவு 10 மணி ஆகியும் உறங்கவில்லையா நீங்கள்.?! இதை படிங்க.!
என்னதான் சீரான உணவுமுறை, பழக்க வழக்கங்கள் என்று பின்பற்றினாலும், இரவு 10 மணிக்கு மேல் தூங்கவில்லை என்றால் உங்கள் உடல் நலன் பாதிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. உடலில் அனைத்து சிகிச்சைகளுக்கும் முன்பு முக்கியமான விஷயம் உறக்கம் தான். ஏனெனில், தூங்கும் பொழுது தான் நமது உடல் பழுது நீக்கும் வேலைகளை முழுமையாக செய்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. அப்படி உடல் பழுது நீக்கும் வேலையில் ஈடுபட முடியாமல் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் எதிர்பாராத அளவிற்கு கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இதனால் வேலையில் கவனமின்மை, எப்போதும் எரிச்சலாக இருப்பது, பிறர் மீது கோபத்தை கொட்டுதல், எதிலும் பெரிதாக நாட்டம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு மற்றும் பசி இல்லாமல் போவது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதுடன் புற்றுநோய் போன்ற ஆழமான பாதிப்புகளையும் நாம் சந்திக்கலாம். 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு சில விஷயங்களை கடைப்பிடித்தால் போதும். அவை என்னவென்று பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் சூரிய ஒளியை பார்க்க வேண்டும். ஒருவேளை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்துவிட்டால் ஏதேனும் ஒரு செயற்கை வெளிச்சத்தை பார்க்கலாம். சூரியன் வந்ததும் சூரிய ஒளியை பாருங்கள். அன்றாடம் ஒரே நேரத்தில் எழுவதையும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதையும் வழக்கமாக கொண்டிருங்கள். நீங்கள் உறங்கும் நேரத்திற்கு முன்பாகவே உறக்கம் வருவதைப் போல உணர்ந்தால் உடனே அலட்சிய படுத்தாமல் தூங்கி விடுங்கள். தூங்கும் நேரத்திற்கு முன்பாக காபின் கலந்த உணவு காப்பி உள்ளிட்டவற்றை குடிப்பதை நிறுத்துங்கள்.
தூங்குவதற்கு முன்பாக ஆழ்ந்த தியானத்தில் இருந்தால் வெகு சீக்கிரத்தில் நீங்கள் தூக்கத்தை எட்டலாம். உங்களை வசியப்படுத்தும் இசை அல்லது கதையை கேளுங்கள். பத்து மணிக்கு மேல் விளக்குகள் எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பகல் நேரத்தில் முடிந்த அளவிற்கு தூங்காதிர்கள். அப்படி தூங்கினால் கூட 90 நிமிடங்களுக்கு மேல் அந்த தூக்கம் நீடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். திடீரென இரவில் விழிப்பு வந்தாலோ அல்லது இயற்கை உபாதை கழிக்க எழுந்தாலோ தூக்கம் கலைந்து விட்டால் ஆழ்ந்த அமைதியான நிலைக்கு சென்று விடுங்கள். தூக்கம் வரவில்லை என்று எழுந்து நடப்பது அல்லது வேறு வேலைகளில் ஈடுபடுவது தவறு. மாறாக படுக்கையிலேயே படுத்துக்கொண்டு மனதை அமைதிப்படுத்துங்கள். தூங்கும் அறையை இருட்டாகவும், சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பது அவசியம்.