நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மேஜிக் சூப்.! இதை குடித்து பாருங்க.!?
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மேஜிக் சூப்.! இதை குடித்து பாருங்க.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு நோய் என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. பொதுவாக நீரிழிவு நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்று கருதி வருகின்றனர்.
மருந்து, மாத்திரைகளுடன் போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு செய்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமலே வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிக்கலாம். குறிப்பாக இந்த சூப் வகைகளை குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
1. தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு போன்றவற்றை தண்ணீரில் நன்றாக வேக வைத்து அரைத்து சூப் போல செய்து குடித்து வந்தால் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
2. உளுத்தம் பருப்பு, வெங்காயம், கேரட், குடைமிளகாய் போன்றவற்றை வேக வைத்து அரைத்து சூப் போல குடித்து வரலாம்.
3. காளான் மற்றும் சில காய்கறிகள், கீரைகளை சேர்த்து வேகவைத்து சூப்பாக குடித்து வந்தால் பசியை கட்டுப்படுத்துவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.
போதுமான உடற்பயிற்சியுடன் இந்த சூப் வகைகளை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.