இந்த அறிகுறிகள் இருந்தால் குடல் நோய் உள்ளது என்று அர்த்தம்.! உடனே மருத்துவரை பாருங்க.!?
இந்த அறிகுறிகள் இருந்தால் குடல் நோய் உள்ளது என்று அர்த்தம்.! உடனே மருத்துவரை பாருங்க.!?
குடல் சம்பந்தப்பட்ட நோயின் காரணங்கள்
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினாலும் பலரும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது பலரும் வீட்டில் சமைத்து சாப்பிடும் ஊட்டச்சத்தான உணவுகளை உண்பதில்லை. இதற்கு மாறாக ஹோட்டல்களில் செய்யப்படும் உணவுகளை உண்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவிதமான நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உண்ணும் போது நம் உடலில் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டாலும் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் மிகுந்த சேதம் அடைய செய்கிறது. இதில் குடல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதில் முக்கிய வேலையை செய்து வருகிறது என்பதால் குடலில் பலவகையான நோய் தாக்குதல்கள் ஏற்படுகின்றது. ஒரு சில அறிகுறிகளை வைத்து குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு இருக்கிறதா என்பதை குறித்து கண்டறியலாம். மேலும் குடல் நோய்களை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்தும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: தினமும் தலைக்கு குளிப்பது இவ்வளவு ஆபத்தா.? மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?
குடலில்
பாதிப்புகள் இருக்கிறதா என்பதை உணர்த்தும் அறிகுறிகள்1. நெற்றி மற்றும் கன்னத்தில் திடீரென்று அதிக முகப்பரு, அலர்ஜி, ஒவ்வாமை போன்ற சரும பிரச்சினைகள் இருந்தால் குடலில் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.
2. காரணமே இல்லாமல் அதீத சோர்வு, தூக்கம் போன்றவை அடங்கும்.
3. திடீரென்று மனக்கவலை, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குடல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்.
குடல்
சம்பந்தப்பட்ட நோய்களை எவ்வாறு சரி செய்யலாம்
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, யோகாசனம், தியானம் போன்றவற்றை செய்வது, வீட்டில் சமைத்த ஊட்டச்சத்தான உணவுகளை உண்பது, பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவற்றை செய்வதன் மூலம் குடல் சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்யலாம்.
இதையும் படிங்க: ப்ரைட் ரைஸ் அடிக்கடி சாப்பிடும் நபரா நீங்கள்.! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!?