பல் மருத்துவரிடம் செல்லாமலே பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டுமா.? உடனே இதை பண்ணுங்க..
பல் மருத்துவரிடம் செல்லாமலே பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டுமா.? உடனே இதை பண்ணுங்க..
எல்லோருக்குமே தங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று ஆசையிருக்கும். அதற்குக் கிருமிகளிடம் இருந்து நம் பற்களைக் காத்து, பளிச்சென்று மாற்றி ஆரோக்கியமான பற்களைப் பெறுவது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். இதற்கு நாம் தினமும் இரவில் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வர வேண்டும்.
ஆப்பிள் பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே தொடர்ந்து நாம் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
மேலும் தினமும் இரவில் ஒரு ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பற்களில் உள்ள கிருமிகள் அழியும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது. மேலும் ஆப்பிளில் வைட்டமின் சி சத்து உள்ளதால் சளி, ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து காக்கிறது.
தினமும் இரவு உணவை சாப்பிட்ட பிறகு ஒரு ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதில் உள்ள மாலிக் ஆசிட் இரவில் பற்களில் கிருமிகள் அண்டாமல் பாதுகாத்து, நம் பற்களை சுத்தம் செய்து விடுகிறது. இதனால் நம் பற்கள் பளிச்சென்று மாறிவிடும்.