கோவில் வெண்பொங்கலை வீட்டில் சுவையாக செய்யலாமா?.! ருசியான கோவில் வெண்பொங்கல் ரெசிபி இதோ..!
கோவில் வெண்பொங்கலை வீட்டில் சுவையாக செய்யலாமா?.! ருசியான கோவில் வெண்பொங்கல் ரெசிபி இதோ..!
பொதுவாகவே கோவிலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் செய்தால் எப்படி இருக்கும் என்று பலரும் யோசித்துப் பார்த்துள்ளனர். தற்போது வீட்டில் வெண்பொங்கல் எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள் :
மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
சிறுபருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1 கப்
முந்திரி பருப்பு - 5
தண்ணீர் - 4½ கப்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
★முதலில் சீரகம் மற்றும் மிளகை இடித்துக் கொள்ள வேண்டும்.
★பின் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், சிறு பருப்பு மற்றும் அரிசி சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
★பின் ஒரு முறை அவற்றை அலசி எடுத்து குக்கரில் 4½ டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அலசிய அரிசி மற்றும் சிறுபருப்பு சேர்த்து 1 தேக்கரண்டி நெய் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூட வேண்டும்.
★அடுத்து குக்கரில் 4 விசில் வந்ததும், தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி நறுக்கி வைத்த இஞ்சி, முந்திரி பருப்பு, கருவேப்பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை தாளித்து அதனை அரிசியில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
★பொங்கலை பொறுத்தவரை இறுதியாக தாளிப்பது தான் ருசியாக இருக்கும். அவ்வளவுதான் மிகவும் சுவையான கோவில் வெண்பொங்கல் ரெடி.