உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த காஜி நேமுவை சாப்பிட்டு பாருங்க.!?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த காஜி நேமுவை சாப்பிட்டு பாருங்க.!?
அசாம் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப்பொருள்தான் இந்த காஜி நேமு. இது அசாம் பகுதிகளில் விளையும் கசப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய எலுமிச்சம் பழம் ஆகும். சாதாரண எலுமிச்சம் பழங்களை விட இது உணவுக்கு அதிகமான சுவையை தருகிறது என்று கூறி வருகின்றனர். அதீதமான சுவை மற்றும் மருத்துவ குணங்களை கொண்டதால் இதன் விலையும் அதிகமாகவே உள்ளது. இந்த காஜி நேமு பழத்தில் உள்ள நன்மைகளை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?
1. வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இப்பழம் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
2. புற ஊதா கதிர்கள் மூலம் செல்களில் ஏற்படும் சிதைவை தடுக்க உதவுகிறது.
3. ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள், கொலாஜன்கள் அதிகமாக இப்பழத்தில் உள்ளதால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
4. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
5. அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள உஷ்ணத்தை சீர்படுத்துகிறது.
6. செரிமான மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை, அல்சர், குடல் புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
7. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இப்பழத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் போது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.
8. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பளபளக்க செய்கிறது.
9. தோலில் ஏற்படும் புண்கள், வெடிப்புகள், பருக்கள், மங்குகள் போன்றவற்றை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10. முதுமையில் இளமை தோற்றத்தை பெற இந்த பழத்தை தினமும் சாறாகவோ அல்லது உணவில் சேர்த்துக் கொண்டால் 80 வயதிலும் இளமையாக இருக்கலாம்.