வீட்டில் அடிக்கடி சண்டையா? மனஅமைதியை பெற்று உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் பொங்கணுமா ! அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....
வீட்டில் அடிக்கடி சண்டையா? மனஅமைதியை பெற்று உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் பொங்கணுமா ! அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....

குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நிலவினால் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் எந்த வேலையும் சரியாக நடக்காது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எனவே வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் போக்கி, உங்களது வீட்டில் இந்த முறைகளை சரியாக பின்பற்றினால் குடும்பத்தில் சண்டைகள் நீங்கி மன நிம்மதி மற்றும் சந்தோசமான வாழ்க்கையையும் வாழ முடியும்.
அமைதி நிலவ உங்களது வீட்டில் ஒரு புத்தர் சிலையை வாங்கி வைக்க வேண்டும். மேலும் புத்தர் சிலை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கின்றது. புத்தரின் சிலை இருக்கும் வீட்டில் எப்போதுமே அமைதிதான் நிலவும். மேலும் புத்தர் இருக்கும் இடம் மங்களகரமாகவும் திகழும்.
அடுத்தப்படியாக உங்களது வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால் உடனே அதை தூக்கி வெளியே எறிந்து விடுங்கள். ஏனெனில் உடைந்த கண்ணாடி வீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல வீட்டில் பல கண்ணாடிகள் இருந்தால், அது வீட்டை அழகாக மாற்றுவது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, உப்பு எல்லா வகையான எதிர்மறை ஆற்றலையும் நீக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் எதாவது ஒரு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: மக்கானா ஆரோக்கியமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட.. உஷார்.!