குளியல் & கழிவறை சுத்தம் செய்ய அசத்தல் டிப்ஸ் இதோ; வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழுக்குகளை நீக்கலாம்.!
குளியல் & கழிவறை சுத்தம் செய்ய அசத்தல் டிப்ஸ் இதோ; வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழுக்குகளை நீக்கலாம்.!
இல்லத்தரசிகள் வீட்டை சுத்தம் செய்யும் வேலைகளில் மிகவும் சிரமம் கொண்டது குளியல் மற்றும் கழிவறை சுத்தம் தொடர்பான விஷயங்கள்தான். அங்கு படிந்திருக்கும் உப்பு கரைகளை நீக்குவது பெரும் சிரமமாக இருக்கும்.
சுவர் மற்றும் தரைப்பகுதியில் இருக்கும் கருப்பு நிற கரைகள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும். சிலர் இதனை நீக்க ரசாயனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவை நாளடைவில் தரைக்கும்-சுவருக்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்தும்.
ரசாயனத்தை பயன்படுத்துவதால் சில நேரம் தோல் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். இதற்கு நாம் எளிய முறையை மேற்கொள்ளலாம். அதற்கு சீயக்காய் மற்றும் புளித்த தயிர், ஷாம்பு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
கிண்ணத்தில் சீயக்காய் தூள், புளித்த தயிர், ஷாம்பு ஆகிய மூன்றையும் சமமான அளவு சேர்த்து, கரைகள் படிந்துள்ள இடத்தில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து தேங்காய் நாரை கொண்டு தேய்த்தால் உப்பு கரைகள் நீங்கும்.