×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடுகளில் பாம்பு தொல்லையா.? இனி கவலை வேண்டாம்.!! இந்த செடி போதும்.. பாம்பு இனி வீட்டு பக்கமே வராது.!!

வீடுகளில் பாம்பு தொல்லையா.? இனி கவலை வேண்டாம்.!! இந்த செடி போதும்.. பாம்பு இனி வீட்டு பக்கமே வராது.!!

Advertisement

மனிதர்கள் வாழும் இந்த உலகில் மனிதர்களோடு பல்வேறு வகையான உயிரினங்களும் வாழ்ந்து வருகிறது.பொதுவாக உயிரினங்களில் பல விஷத்தன்மை உடைய உயிரினங்கள் இருந்தாலும் அனைவரும் பயப்படுவது பாம்பிற்கு தான். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியும் இருக்கிறது. கிராமப்புறங்களில் வீட்டின் அருகில்  தோட்டம் மற்றும் ஆறு இருப்பதால் பாம்புகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மேலும் நகரங்களிலும் அதிகமான குப்பை சூழ்ந்துள்ள இடங்கள் மற்றும் செடி கொடிகள் நிறைந்த பகுதிகளிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இது போன்ற சூழல்களில் வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க பல்வேறு வகையான முறைகளையும் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். எனினும் சில செடிகளை நம் வீட்டில் வளர்க்கும் போது அதன் வாசத்திற்கு பாம்பு வீட்டை நெருங்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எந்த மாதிரியான செடியை வளர்த்தால் பாம்புகள் வீட்டிற்கு வராது என்பதை இந்த பதிவில் காணலாம். பொதுவாக வீட்டை சுற்றி பாம்பு நடமாட்டம் இருந்தால் நம் வீட்டில் உப்பு கல்லை போடுவார்கள்.

இது மட்டுமில்லாமல் பாம்பு வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு சாணத்துடன் பெருங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கரைத்து வீட்டை சுற்றி தெளித்து வந்தால் பாம்பு வராது. மேலும் குருணை மருந்துடன் ஆற்று மணலை நன்றாக கலந்து வருடத்திற்கு இரண்டு முறை வீட்டை சுற்றி போட்டால் பாம்பு வராது. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சாம்பிராணி புகை போன்றவற்றிற்கும் பாம்பு வராது. பாம்புகளை கட்டுப்படுத்துவதற்கு இது போன்று பல வழிகள் இருந்தாலும் இந்தச் செடிகளை வீட்டில் வளர்க்கும் போது அவற்றின் வாசத்திற்கு பாம்பு வீட்டை அண்டாது.

நமது வீடு அல்லது தோட்டங்களில் பாம்பு தொல்லை அதிகமாக இருக்கும் போது நாகதாளி, சிறிய நங்கை, ஆகாச கருடன், பெரிய நங்கை இந்தச் செடிகளில் ஏதேனும் ஒரு செடியை நமது வீட்டில் வைத்து பராமரித்து வந்தால் இவற்றின் வாசனைக்கு பாம்புகள் வீட்டு பக்கமே வராது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உங்களது வீட்டிற்கு  அருகிலும் பாம்பு தொல்லை இருந்தால் இது போன்ற செடிகளை வைத்து முயற்சி செய்து பாருங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snakes #Life style #Safety Tips #Plants To Protect House From Snake #cobra
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story