×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களுக்கு வரும் தலைவலி எந்த வகையை சேர்ந்தது? எதனால் வருகிறது?

உங்களுக்கு வரும் தலைவலி எந்த வகையை சேர்ந்தது? எதனால் வருகிறது?

Advertisement

'தலை இருந்த தலைவலி தானே வரும்' - நாம் எப்போதெல்லாம் தலைவலி என்று யாரிடமாவது கூறுகிறோமோ அப்போதெல்லாம் இதை கேட்டிருப்போம்.

தலைவலி என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது. நாம் செய்யும் தொழில், மனதில் கவலை, இழப்புகள், சோகமான சூழல் என எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் தலைவலி வரலாம். 

தலைவலி அனைத்து வயதுடையவர்கள் மத்தியிலும் வரக்கூடிய ஒன்று. வலி தலையில் எங்கு ஏற்பட்டாலும் தலைவலியே. அது ஏன் வருகிறது? அதன் வகைகள் என்ன?

தலைவலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது பாகுபாடின்றி வரும். இந்த வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்ககூடும். அதிக வெளிச்சம், தூக்கமின்மை, பலத்த காயம் என்று காரணங்கள் அதிகம் கூறலாம்.

இதன் வகைகள் கிளஸ்டர் தலைவலி, உளைச்சல் தலைவலி, ஒற்றைத் தலைவலி என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

கிளஸ்டர் தலைவலி: மற்ற எல்லா வகை தலைவலிகளை விட அதிகமான வலியை தரக்கூடியது தான் இந்த கிளஸ்டர் எனும் தலைவலி. இது ஒரு வித்தியாசமான வலியும் கூட. இந்த வலியானது குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வரும், வந்தாலும் கடுமையான வலியாகத் தான் இருக்கும். 

ஒரு வருடத்தில் இரண்டு கிளஸ்டர் காலப்பகுதி இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல கிளஸ்டர் தலைவலி மாறுபடும். சிலருக்கு கொத்தாக வரக்கூடும், சிலருக்கு எப்போதாவது வரும். வருடங்களுக்கு பல முறையும் வரலாம் அல்லது இரு முறையும் வரலாம் அவரவர் உடல்நிலை பொறுத்தே அமையும்.

உளைச்சல் தலைவலி:  இதனை டென்ஷன் தலைவலி என்றும் கூறுவர். மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்படுகிறது என்றால் அது டென்ஷன் தலைவலியாகத் தான் இருக்கும். தலையை சுற்றி ஒரு இறுக்கமாக இருப்பதைப் போல உணர்வைக் கொடுக்கும். கழுத்தோடு வலியும் இறுக்கமாக இருக்கும்.

இந்த தலைவலி கம்பியூட்டர் அதிகம் பார்ப்பதனால், விடியோ கேம் விளையாடுவதால், மெஷின்களை நீண்ட நேரம் உபயோகிப்பதால் வரக்கூடும்.

ஒற்றைத் தலைவலி: ஒற்றைத் தலைவலி கூட மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒன்று தான். பிள்ளைகளுக்கு அதிகம் வரும் ஒன்று. இது குடும்பத்தில் எவருக்கேனும் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புண்டு.

வயிற்று வலி, வாந்தியால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியோடு வரக்கூடிய ஒன்று.

அதிகமான வெளிச்சத்தை பார்த்தாலும் இந்த ஒற்றை தலைவலி வரும். குறிப்பிட்ட நேரங்கள் அதீத வெளிச்சத்தை பார்த்தால் இந்த தலைவலியானது வர நேரிடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#headache #health issues #health tips #types of headaches
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story