காதலர் தினத்தன்று தயவு செய்து அதனை செய்யாதீர்கள்!! அடுத்த தலைமுறையை காப்பாற்றுவோம்!!
Valentines Tips

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல பிரச்சனைகளும் நடந்துவருகிறது.
தற்போதைய வாழ்க்கை முறையில் காதலர் தினத்தன்று நடைபெறும் சம்பவங்கள், பொதுவாகவே அனைத்து மக்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பயணிக்கும் இடமாக பூங்காவும், கடற்கரையும் இருந்து வருகிறது.
ஆனால் பெண்கள் தரப்பிலோ அல்லது தூரத்து உறவு முறையினர் யாராவது ஒருவர் பார்த்துவிட்டு, அந்தச் சம்பவம் பற்றி வெளியே கூறினால் அந்தப் பெண்ணின் அடுத்தகட்ட வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும்.
ஆனால் ஆண்கள் அவ்வாறு அல்ல அதைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் வேறு கல்யாணத்தை செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள்.
எனவே தயவுசெய்து இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தற்போதைய வாழ்க்கை முறையில் காதல் என்பதை விட, கள்ள காதல் என்னும் வார்த்தை தான் தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனவே பலர் புனிதமாக கருதும் காதலர் தினத்தை, சிலரின் மாறுபட்ட கருத்தாலும் அவர்களது வாழ்க்கை முறையாலும் அந்த வார்த்தையை அசிங்க படுத்தி விடாதீர்கள்.