ஆரோக்கியமான வரகு அரிசி பருப்பு அடை... வீட்டிலேயே செய்வது எப்படி?..!
ஆரோக்கியமான வரகு அரிசி பருப்பு அடை... வீட்டிலேயே செய்வது எப்படி?..!
காலை வேளையில் ஆரோக்கியமாக சாப்பிட வரகு அரிசி பருப்பு அடை எவ்வாறு சமைப்பது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
அவல் - 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 6
வெங்காயம்-1
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
★முதலில் கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் வரகு, அவல் மற்றும் பருப்புகளை நீரில் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
★அடுத்து இவையனைத்தும் நன்றாக ஊறிய பின், மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
★பின் ஊறவைத்த வரகில் உள்ள நீரை முழுமையாக வடிகட்டி, மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
★தொடர்ந்து உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் அவல் போன்றவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வரகுடன் சேர்த்து 2 மணி நேரம் தனியாக வைக்கவேண்டும்.
★2 மணிநேரத்திற்கு பின் அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை கலந்துகொள்ள வேண்டும்.
★இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடை மாவை சுட்டு முன்னும், பின்னும் வேகவைத்து எடுத்தால் வரகு அரிசி பருப்பு அடை ரெடியாகிவிடும்.