வீட்டில் கண்ணாடி இந்த திசையில் இருந்தால் அதை உடனே மாத்தி வையுங்கள்! தீராத பிரச்சனை வருமாம்!
Vasthu sashthiram for mirror position in tamil
வீடு கட்டும்போதும், வாங்கும்போது நாம் அனைவரும் பார்க்கும் மிக முக்கியமான ஓன்று வாஸ்து. வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மரபுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு விஞ்ஞான கட்டிடக்கலையாகும். இந்த வாஸ்து சாஸ்த்திரம் என்பது புதிதாக தோன்றியது இல்லை, இது ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரீகங்களின் போதே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.
சில நேரங்களில் வாஸ்துவிற்காக வீட்டையே முழுமையாக மாற்றியும், வேறு வீடு மாறியும் கூட உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பாதிப்புகள் குறைந்திருக்காது. அதற்கு காரணம், வீட்டின் அமைப்பு மட்டும் இல்லாது, வீட்டில் இருக்கும் பொருட்களின் இடத்தையும் பொறுத்துதான் வாஸ்து அமைகிறது என்கிறது வாஸ்து சாஸ்த்திரம்.
அதன்படி முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த இட்டதில் வைக்க வேண்டும், வைக்க கூடாது என்கிறது வாஸ்து. பொதுவாக நாம் தூங்கும் அறையில் நாம் தூங்கும்போது நமது உடல் கண்ணாடியில் தெரியும்படி தூங்க கூடாது. அப்படி தூங்கினால் கண்ணாடியில் தெரியும் உடல் பகுதி நோய்வாய் பட அதிக வாய்ப்புள்ளதாம்.
அதேபோல் கண்ணாடியின் வடிவமானது சதுரமாக இருக்கவேண்டும், முக்கோணம், வட்ட வடிவிலான கண்ணாடிகளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். மேலும் கண்ணாடியை இருட்டான இடத்தில் வைக்க கூடாது. காரணம், கண்ணாடியானது அனைத்தினும் தன்னுள் இழுத்து பிரதிபலிக்கக்கூடிய ஒரு பொருள். இதனால் இருட்டில் இருந்து வெளிவரும் எதிர்மறை சக்திகளை உள்ளிழுத்து அதை மற்ற இடங்களுக்கும் கண்ணாடி பிரதிபலிக்கும்.
கழிவறையுடன் தொடர்புடைய சுவரில் மாட்டக்கூடாது. முன்கதவை நோக்கி மாட்டக்கூடாது. முன்கதவிற்கு எதிராக கண்ணாடி மாட்டப்படும் போது அது எதிற்மறை சக்திகளை மட்டுமின்றி நேர்மறை சக்திகளையும் விரட்டும். இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிராக மாட்டும் தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.