10 நிமிடத்தில் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு... வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!
10 நிமிடத்தில் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு... வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!
வெண்டைக்காய் மோர் குழம்பு 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 3
தேங்காய் - கால் கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - ஒரு கப்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 3
இஞ்சி - அரை துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு -அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
★பின் வெண்டைக்காயில் உப்பு போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
★அடுத்து பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, மஞ்சள் பொடி, தேங்காய் ஆகியவற்றை மைய அரைக்கவும்.
★பின் தயிரில் உப்பு போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
★அரைத்த விழுதினை கலந்து விட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவேண்டும்.
★பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு பிரட்டி எடுக்க வேண்டும்.
★இறுதியாக தயிரை அதில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கும்போது, அடுப்பை அணைத்தால் வெண்டைக்காய் மோர் குழம்பு தயாராகிவிடும்.