சிக்கன் லெக் பீஸ் சாப்பிடும் கோழி..! பலலட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ..!
Viral video Chicken eat chicken leg peace
கோழி ஓன்று லெக் பீஸ் சாப்பிடும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாகா மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக சிக்கன் கருதப்படுகிறது. பிராய்லர் போன்ற சிக்கன் வகைகளை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு தீங்குகள் நேரும் என்று தெரிந்தும், நம்மில் பலர் இந்த சிக்கெனுக்கு அடிமையாக உள்ளோம்.
ஸ்னாக்ஸ் சாப்பிடுவதுபோன்று, தினமும் உணவில் சிக்கன் இல்லை என்றால் கோபித்துக்கொள்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதர்கள் இப்படி இருக்க, தனது இனத்தை சேர்ந்த கோழியின் லெக் பீஸை மற்றொரு கோழி சாப்பிடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
லுக்மில் என்பவர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை 33.9 லட்சம் பேர் லைக் செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.
@lukemil4 just repulsive. ##fyp ##4u ##chicken ##cannibal ##animalseatanimals ##foryou ##foryoupage ##animals ##disgusting ##horrific
♬ original sound - lukemil4