"வீட்டிலேயே இயற்கையான முறையில் குடிநீரை சுத்திகரிப்பது எப்படி தெரியுமா?!"
வீட்டிலேயே இயற்கையான முறையில் குடிநீரை சுத்திகரிப்பது எப்படி தெரியுமா?!
மனிதர்கள் உயிர் வாழ ஆதாரமே தண்ணீர் தான். ஆனால் பெரும்பாலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உட்பட குப்பைகளும் கலந்த தண்ணீர் தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் தான் உள்ளது.
எனவே குடிநீரை சுத்திகரிப்பது அவசியமாகும். ஆனால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் குடிநீரை சுத்திகரிக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் இருப்பதில்லை. எனவே இயற்கை முறையில் வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைப்பொடியை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் நீரில் உள்ள கிருமிகளை நீக்கும். மேலும் மண்பானையில் சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.
மேலும் நன்னாரி வேர், வெட்டி வேர் ஆகிய வேர்களை தண்ணீரில் போட்டு குடிக்கலாம். இந்த மூலிகை கலந்த தண்ணீர் கிருமிகளை அழித்து உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. மேலும் தண்ணீரை கொதிக்க வைத்து அதை சுத்தமான துணியில் வடிகட்டி குடிப்பதும் நல்லது.