"நாம் பயந்தால் இதெல்லாம் நம் உடலில் நடக்குமாம்!"
நாம் பயந்தால் இதெல்லாம் நம் உடலில் நடக்குமாம்!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதோ ஒரு வகையில் பயப்படுவர். இதற்கு சில சாதாரண சூழ்நிலைகள் முதல் அசாதாரண சூழ்நிலைகள் வரை காரணமாக இருக்கும். நாம் ஒரு பிரச்னையை சந்திக்கும்போது இயல்பாகவே நமக்குள் பயம் எழும்.
அப்படி நாம் பயப்படும்போது நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாம் பயப்படும்போது நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதனால் மூச்சின் வேகமும். உளவியல் அடிப்படையில் மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் பயம் ஏற்பட சில காரணங்கள் உள்ளன.
மூளையில் உள்ள சில நியூரான்கள் மற்றும் மரபணு தொடர்பான பெப்டைட் ஆகியவை பயம் ஏற்படக் காரணிகளாக உள்ளன. நாம் பயப்படும்போது நம் உடலில் கார்டிசோல் உள்ளிட்ட ஹார்மோன்கள் மற்றும் சில ரசாயனக்கூறுகள் வெளிப்படுகின்றன.
பல நேரங்களில் நமது பயமே கூட நமக்கு மரணத்தை ஏற்படுத்தும். பயத்தின்போது அட்ரினலின் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அப்போது கண் நரம்புகள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் விறைப்பாகி, இதய செயலிழப்பு ஏற்படுத்தும்.