"பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் pbc ஜூஸ்!" எப்பிடி செய்யணும் தெரியுமா.?
பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் pbc ஜூஸ்! எப்பிடி செய்யணும் தெரியுமா.?
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வகையான ஜூஸ்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் (ஏபிசி). இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்களுக்கு வரப்பிரசாதமான (pbc) பைனாப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் ஒன்று உள்ளது.
இதில் இரும்புச்சத்து, போலிக் ஆசிட், சோடியம், மக்னீசியம், புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த ஜூஸ் ரத்தசோகையை நீக்கும். சருமத்தை அழகாக்கும். பெண்களின் பி சி ஓ எஸ் பிரச்சனைக்கும் அருமருந்தாகும்.
ஒரு கீற்று அன்னாசிப் பழத்தை தோல்நீக்கி துண்டுகளாக்கி, சிறிது கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல்நீக்கி துண்டுகளாக்கி, மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பிறகு ஒரு டம்ளரில் மாற்றிக் குடிக்கலாம்.
இந்த பானம் தோல் சுருக்கத்தை நீக்கி இளமையை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும் உடலிலுள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.