இந்திய பெண்கள் இணையதளத்தில் இதைத்தான் அதிகம் தேடுகிறார்களாம்! சர்வே ரிப்போர்ட்!
What mostly search in internet by Indian girls
இணையதள சேவை என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இணைய சேவை இல்லாமல் எதுவும் இல்லை என்ற அளவிற்கு இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதில், இந்திய பெண்கள் இணையத்தில் அப்படி என்ன மாதிரி விஷயங்களை தேடுகிறார்கள், பார்க்கிறார்கள் என்ற தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஆங்கில புலமை, மென்பொருள் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள, அது சம்மந்தமாக தேடல்களில் சுமார்44 சதவீதம் பெண்கள் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் நேரம் என்று பார்த்தால் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை என்கிறது அந்த முடிவு. குறிப்பாக பெரும்பாலான பெண்கள் தங்கள் தாய் மொழியை தவிர்த்து ஆங்கில மொழியிலையே அதிகம் தேடுவதாகவும், ஆங்கில மொழியிலையே விஷயங்களை படிப்பதாகவும் அந்த முடிவு கூறுகிறது.
குறிப்பாக 18 முதல் 23 வயதுக்குள் இருக்கும் பெண்கள் இணையத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, போன்றவற்றைத்தான் அதிகம் தேடுவதாகவும், 29 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆரோக்கியம் மற்றும் சுய முன்னேற்றம் உள்ளிட்ட தகவல்களை தேடுகிறார்களாம்.