கண்களுக்கு அழகு சேர்க்கும் காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷ்யங்கள் .
when you ware kajal in your face maintain some tips
கண்களுக்கு காஜல் போடும் போது செய்ய வேண்டியவை:
கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.
காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இருந்தாலும் நாம் கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.
ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.
காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.