மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள் எது தெரியுமா.?
மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள் எது தெரியுமா.?
பொதுவாகவே அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை பருவகாலப் பழங்கள் என்கிறோம். இந்த பருவகாலப் பழங்கள் நம்மை பருவகால நோய்த்தொற்றிலிருந்து காக்கின்றன. இந்த பருவமழை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
மேலும் பருவகால ஒவ்வாமை, அழற்சிகள் ஆகியவற்றிலிருந்து இந்த பருவகால பழங்கள் நம்மை காக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பருவ மழைக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்படுவர்.
அவர்கள் வைட்டமின் சி நிறைந்துள்ள லிச்சிப்பழத்தை அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம். அதிக ஊட்டச்சத்துக்களையும், குறைந்த கலோரிகளையும் கொண்ட நாவல் பழம், மற்றும் பொட்டாசியம், விட்டமின்கள் அதிகமுள்ள கொய்யாப்பழமும் உண்ணலாம்.
இந்த கொய்யாப்பழம் இரைப்பை பிரச்சனைகளை சரி செய்யும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாதுளை சளி, காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்யவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. பப்பாளியில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.