கோவில்களில் நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா? இதோ!
Why should not cross nandhi in temple
பிரதோஷ காலத்தில் நந்திக்கே முக்கியத்துவம் தருவர். மேலும், பிரதோஷ காலத்தில் நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் கூறுவது வழக்கம். அவ்வாறு சொல்ல காரணாம் என்ன தெரியுமா வாங்க பாக்கலாம்.
பொதுவாக ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார்.
நந்தி தேவர் வேண்டி கேட்டுக்கொண்டதால் சிவபெருமான் நந்தியை தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார். மேலும், நானே உனக்கு உயிராய் இருப்பதனால் நம்மை வணக்கும் பக்தர்கள் செய்யும் பாவம் கூட புண்ணியமாய் மாறும் என நந்திக்கு வரம் அருளினார் சிவபெருமான்.
இந்நிலையில் நந்தி சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான்.
அப்படிப்பட்ட சமயத்தில் நாம் நந்தியை கடந்து குறுக்கே சென்றால் அது கடவுளிடம் சென்றடைய நினைப்பவர்களை தடுப்பதற்கு சமம். இதனால்தான் நந்தியின் குறுக்கே செல்ல கூடாது என்பதற்கான காரணம்.