இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5. ஆனால், உலக ஆசிரியர் தினம் என்னைக்கு தெரியுமா?
World teachers day vs india teachers day
இந்தியாவை பொறுத்தவரை ஒவொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் Dr . ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது போலவே ஒவொரு நாட்டிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவொரு நாட்டிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாட்கள் வேறுவேறானவை.
ஆனால், உலகம் முழுவதிலும் ஒருநாளை தேர்வு செய்து அன்று உலக ஆசிரியர் தின நாளாக கொண்டாடிவருகின்றனர். ஒவொரு வருடமும் அக்டோபர் மாதம் 5 ஆம் நாளை உலக ஆசிரியர் தின நாளாக கொண்டாடிவருகின்றனர்.