ரஜினியின் மக்கள் மன்றத்தில் சேர விரும்புகிறீர்களா? அப்போ முதலில் இந்த விதிகளை படியுங்கள்
ரஜினியின் மக்கள் மன்றத்தில் சேர விரும்புகிறீர்களா? அப்போ முதலில் இந்த விதிகளை படியுங்கள்
அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினிகாந்தின் அதிரடி அறிவிப்பாள் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகளில் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்திற்கு என்று, தனி விதிகளை உருவாக்கி தற்போது புத்தகமாக நடிகர் ரஜினி வெளியிட்டார்.
இதில் முக்கிய விதிகளாக குறிப்பிட்டுள்ளதாவது:-
இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமுதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரத்திரமாக பொருத்தக்கூடாது.
மன்ற கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.
ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.
மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.
தீய பழக்கங்கலுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.
சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.
சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.